பாகிஸ்தான் தலைநகருக்குள் நுழைய மறுத்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் விமான நிலையத்திலேயே சந்திப்பை முடித்து கிளம்பியதால் அரசுக்கு நெருக்கடி

பாகிஸ்தான் தலைநகருக்குள் நுழைய மறுத்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் விமான நிலையத்திலேயே சந்திப்பை முடித்து கிளம்பியதால் அரசுக்கு நெருக்கடி

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சமீபத்தில் பாகிஸ்தான் வந்தபோது அந்நாட்டு அரசுக்கு பெரும் தர்மசங்கடமான சூழல் உருவானது. பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆகியோர் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற போதிலும் அவர் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு செல்ல மறுத்துவிட்டார். விமான நிலையத்திலேயே சில நிமிடங்கள் பேசிவிட்டு உடனடியாக தனது தனிப்பட்ட பயணத்திற்காக ரஹீம் யார் கான் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்த அதிகாரப்பூர்வ பயணத்தில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் சர்தாரியை அவர் சந்திக்கவில்லை என்பதுடன் பிரதமர் இல்லத்திற்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பையும் நிராகரித்தார். ஒரு நாட்டின் அதிபர் தலைநகருக்கு வராமல் விமான நிலையத்துடன் பயணத்தை முடித்துக் கொண்டது பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு அமைச்சரே இந்தத் தகவலை ஒப்புக்கொண்டது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *