பாகிஸ்தானை அதிரவைக்கும் இந்திய பிரான்ஸ் ஏவுகணை ஒப்பந்தம்

பாகிஸ்தானை அதிரவைக்கும் இந்திய பிரான்ஸ் ஏவுகணை ஒப்பந்தம்

இந்திய விமானப்படையின் பலத்தை அதிகரிக்க பிரான்ஸிடமிருந்து 3,200 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன ஸ்கால்ப் (SCALP) குரூஸ் ஏவுகணைகளை வாங்க மத்திய அரசு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக அழித்த இந்த ஏவுகணைகளின் செயல்பாடு, இந்த புதிய ஒப்பந்தத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரஃபேல் போர் விமானங்களின் தாக்குதல் திறன் பலமடங்கு உயரும். எதிரிநாட்டு எல்லைக்குள் நுழையாமலேயே இலக்குகளை அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், எதிர்காலத்தில் கடற்படையின் ரஃபேல் மெரின் விமானங்களிலும் இணைக்கப்பட உள்ளன. இது இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறனை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *