பக்கத்து அறையில் கேட்ட விசித்திரமான சத்தம் எட்டிப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்

பக்கத்து அறையில் கேட்ட விசித்திரமான சத்தம் எட்டிப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்

கனடாவின் ஆல்பெர்ட்டா பகுதியில் வசிக்கும் ரெட்டி குடும்பத்தினர் தங்கள் வீட்டின் வரவேற்பறையில் 600 பவுண்ட் எடையுள்ள ராட்சத கரடி ஒன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த கரடி ஒன்று சுவர்களை பிராண்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர். இதனால் அந்த வீடே பெரும் பரபரப்பில் ஆழ்ந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கரடியை வெளியேற்ற அவர்கள் முயற்சித்தனர். ஒரு கதவைத் தவிர மற்ற அனைத்து வழிகளையும் அடைத்து கரடி தானாக வெளியேற வழிவகை செய்தனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த ராட்சத கரடி வீட்டை விட்டு வெளியேறியது. மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வனவிலங்கு துறையினர் அந்த பகுதியில் கூண்டுகளை அமைத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *