நிச்சயதார்த்தம் முடிந்த பின் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணப்பெண் உத்திரபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி
December 30, 2025

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கியையைச் சேர்ந்த சுனில் குமார் மற்றும் பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் உற்சாகமாக நடந்து வந்தன. மாலை மாற்றுதல் உள்ளிட்ட சடங்குகள் முடிந்த நிலையில் மணமகன் மகிழ்ச்சியுடன் நடனமாடினார். ஆனால் அதிகாலையில் மணப்பெண் விடைபெறும் நேரத்தில் பல்லவி திடீரென காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல மணி நேரம் தேடியும் மணப்பெண் கிடைக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மணமகன் வீட்டார் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மணப்பெண் தனது காதலனுடன் நள்ளிரவில் தப்பிச் சென்றது தெரியவந்தது. திருமணத்திற்காக பெண் வீட்டார் நிலத்தை அடமானம் வைத்து ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.