நடுநிசியில் திருடன் என நினைத்து தர்ம அடி மறுநாள் காலையிலேயே மாப்பிள்ளையாக மாறிய இளைஞர்

நடுநிசியில் திருடன் என நினைத்து தர்ம அடி மறுநாள் காலையிலேயே மாப்பிள்ளையாக மாறிய இளைஞர்

எக்ஜலோக் நியூஸ் டெஸ்க் : உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் பகுதியில் விசித்திரமான காதல் திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது. விகாஸ் என்ற இளைஞர் நள்ளிரவில் தனது காதலியைச் சந்திக்க ரகசியமாக அவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதைக் கவனித்த குடும்பத்தினர் அவரைத் திருடன் என்று கருதி பிடித்து சரமாரியாகத் தாக்கினர். அப்போது தான் திருடன் அல்ல என்றும் அதே வீட்டைச் சேர்ந்த ரூபி என்பவரைக் காதலிப்பதாகவும் அந்த இளைஞர் கதறினார்.

உண்மையை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். காதலி ரூபியும் தனது காதலை உறுதிப்படுத்தியதால், அடி வாங்கிய இளைஞருக்கே மறுநாள் காலையில் தனது மகளைத் திருமணம் செய்து வைத்தனர். திருடன் என்று ஊரே பார்த்துக் கொண்டிருந்த இளைஞர், விடிந்ததும் அதே வீட்டின் மருமகனாக மாறிய நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *