தேர்தல் கூட்டணி குறித்து தவெக மாவட்ட செயலாளர்களுடன் என் ஆனந்த் அவசர ஆலோசனை

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். சமீபத்தில் விஜய் 60 வேட்பாளர்களைத் தேர்வு செய்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த அவசரக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் கூட்டணி குறித்த மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்ட நிலையில், தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
யாரையும் நம்பி நாம் கட்சி தொடங்கவில்லை என்றும், தனித்துப் போட்டியிட்டாலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறக் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், மற்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்களை விரைந்து தேர்வு செய்து தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்றும், தலைமை அறிவிக்கும் வேட்பாளர்கள் மட்டுமே நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்றும் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.