திரையுலக பின்னணி பாடுவதிலிருந்து விலகுகிறாரா அர்ஜித் சிங் விஷால் தத்லானி வெளியிட்ட அதிரடி தகவல்

திரையுலக பின்னணி பாடுவதிலிருந்து விலகுகிறாரா அர்ஜித் சிங் விஷால் தத்லானி வெளியிட்ட அதிரடி தகவல்

பாலிவுட்டின் முன்னணி பாடகர் அர்ஜித் சிங் இனி திரைப்படங்களுக்குப் பாடுவதில்லை என்று எடுத்துள்ள முடிவிற்கு இசையமைப்பாளர் விஷால் தத்லானி ஆதரவு தெரிவித்துள்ளார். அர்ஜித் ஒரு இசை மேதை என்றும், அவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களைச் செய்ய முழு சுதந்திரம் உண்டு என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார். புதிய பட வாய்ப்புகளை ஏற்கப்போவதில்லை என அர்ஜித் ஏற்கனவே அறிவித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரைத்துறையின் வணிக ரீதியான அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, தனிப்பட்ட இசைப் பயணத்தில் (Independent Music) கவனம் செலுத்த அர்ஜித் விரும்புவதாகத் தெரிகிறது. அவரது அண்மைய வெளியீடான ‘ரைனா’ பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வெள்ளித்திரையில் அவரது குரல் ஒலிக்காவிட்டாலும், ஒரு சுதந்திரக் கலைஞராக அர்ஜித்தின் புதிய பயணம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *