திமுக மேடையில் எடப்பாடியின் துரோகத்தை போட்டுடைத்த ஓ பன்னீர்செல்வம்

திமுக மேடையில் எடப்பாடியின் துரோகத்தை போட்டுடைத்த ஓ பன்னீர்செல்வம்

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தென்காசி தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிரடியாகத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சியாகச் சுருக்கி, தமிழக மக்களுக்கும் கட்சிக்கும் மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். பழனிசாமி குறுக்கு வழியில் முதலமைச்சரானவர் என்றும், ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தலைவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

ஒன்றிய அரசின் நிதி நெருக்கடிகளையும் கடந்து முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதாக ஓபிஎஸ் பாராட்டினார். தமிழக மக்கள் மீண்டும் ஸ்டாலினையே முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்க முடிவெடுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், வருங்காலத்தில் திமுகவே தமிழகத்தை ஆளும் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார். கழக அரசின் சாதனைகளை விளக்கிய அவர், எடப்பாடியின் சுயநல அரசியலை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என முழங்கினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *