திமுக பக்கம் சாய்கிறாரா ஓபிஎஸ்? நிருபரின் கேள்வியால் பரபரப்பு – அவரே கொடுத்த ‘நச்’ பதில் இதுதான்!
February 9, 2026

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் கூட்டணி நிலைப்பாடு பெரும் விவாதமாக மாறியுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற அவரிடம், திமுக கூட்டணியில் இணையப் போகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஓபிஎஸ், “நீங்கள் ஏன் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது” என நாசூக்காகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
ஏற்கனவே “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனக் கூறி வந்த ஓபிஎஸ், தற்போது கூட்டணி குறித்த அறிவிப்பை இம்மாத இறுதிக்குள் எதிர்பார்க்கலாம் எனத் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பு அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க மறுக்கும் நிலையில், பாஜக அல்லது டிடிவி தினகரனுடன் இணைந்து அவர் எடுக்கும் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.