தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 அன்று பொது விடுமுறை அறிவிப்பு
March 27, 2026

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30இல் தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் விஜய் தலைமையிலான தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ஆம் தேதி பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஏற்கனவே அங்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.