தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி குறித்து டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி குறித்து டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அட்டவணையை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வரும் மார்ச் 15-ஆம் தேதி தேர்தல் தேதிகளை முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாகத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட பின், மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்றைய ஆலோசனைக் கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *