தமிழகம் முழுவதும் இன்று தவெக முன்னெடுக்கும் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் இன்று தவெக முன்னெடுக்கும் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று மார்ச் 12 அன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்விற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருட்கள் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசைக் கண்டித்து இந்தக் குரல் எழுப்பப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *