தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவியேற்கிறார்

தமிழகத்தின் புதிய பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவியேற்கிறார்

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பகல் 12.30 மணிக்கு முறைப்படி பொறுப்பேற்கிறார். சென்னை ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். கேரளா ஆளுநராக உள்ள அர்லேகர், தற்போது தமிழகத்தின் கூடுதல் பொறுப்பை கவனிப்பார்.

முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. கடந்த 2021 முதல் தமிழக ஆளுநராக இருந்த ரவி, பல்வேறு விவகாரங்களில் அரசுடன் முரண்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. இன்று முதல் தமிழக ராஜ்பவனில் புதிய நிர்வாக மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *