தங்கம் வெள்ளி மற்றும் தாமிரத்தின் விலை கடும் வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

தங்கம் வெள்ளி மற்றும் தாமிரத்தின் விலை கடும் வீழ்ச்சி முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் கொள்கை குறித்த அறிவிப்புகளால் சர்வதேச சந்தையில் உலோங்களின் விலை சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய சந்தையில் தங்கம் விலை 1,000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை கிலோவிற்கு சுமார் 19,000 ரூபாய் வரை சரிந்து 2.32 லட்ச ரூபாயை எட்டியுள்ளது. கடந்த காலங்களில் உயர்ந்து வந்த உலோகங்களின் விலை, தற்போது அமெரிக்க பொருளாதார மாற்றங்களால் உலகளவில் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

தாமிரத்தின் விலையும் சுமார் 6 சதவீதம் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் வட்டி விகிதக் குறைப்பில் நிலவும் நிச்சயமற்ற தன்மையே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். 2026-ஆம் ஆண்டில் வட்டி விகிதக் குறைப்பு ஒருமுறை மட்டுமே இருக்கும் என்ற ஃபெடரல் வங்கியின் சமிக்ஞை, தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடுகளைக் குறைத்து சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *