தங்கம் வாங்கப்போறீங்களா ரொக்கமாக எவ்வளவு செலுத்தலாம் மற்றும் வருமான வரி விதிகள் இதோ

இந்திய கலாச்சாரத்தில் தங்கம் ஒரு முக்கிய முதலீடாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தங்கம் வாங்குவதற்கான விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. தற்போதைய விதிமுறைப்படி, ஒருவர் ஒருமுறை அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை மட்டுமே ரொக்கமாக தங்கம் வாங்க முடியும். இதற்கு மேலான தொகைக்கு வங்கி பரிமாற்றம், யூபிஐ அல்லது காசோலை போன்ற டிஜிட்டல் முறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும், ₹50,000-க்கு மேல் தங்கம் வாங்கும்போது பான் (PAN) கார்டு விவரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வரி ஏய்ப்பை தடுக்கவும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் உதவும். தங்கம் வாங்க ஆதார் அட்டை கட்டாயமில்லை என்றாலும், அடையாள சரிபார்ப்பிற்காக சில கடைக்காரர்கள் அதை கேட்கக்கூடும். விதிகளை மீறினால் வருமான வரித்துறையின் ஆய்வுக்கு உள்ளாக நேரிடும் என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.