டெல்லி கேபிடல்ஸ் வசம் சென்ற மில்லர் வெறும் 2 கோடிக்கு மகுடம் சூடியது
December 17, 2025

ஐபிஎல் 2026 மினி ஏலத்தின் முதல் சுற்றிலேயே டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடி காட்டியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் அனுபவமிக்க அதிரடி வீரர் டேவிட் மில்லரை வெறும் 2 கோடி ரூபாய் அடிப்படை விலைக்கு அந்த அணி வாங்கியது. நட்சத்திர வீரரான மில்லர் 10 கோடி ரூபாய் வரை ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித போட்டியுமின்றி டெல்லி அவரை மிகக் குறைந்த விலைக்கு கைப்பற்றியது.
இதுவரை 141 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3077 ரன்களை மில்லர் குவித்துள்ளார். சிறந்த ஃபினிஷராக அறியப்படும் இவரின் வருகை டெல்லி அணியின் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும். 139 என்ற ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள மில்லர் போன்ற அனுபவ வீரரை அடிமாட்டு விலைக்கு வாங்கியது டெல்லி அணிக்கு கிடைத்த மிகப்பெரிய லாபமாக கருதப்படுகிறது.