டி20 உலகக் கோப்பை வரலாற்றில் விராட் கோலியின் இமாலய சாதனையை தகர்க்கப்போகும் அந்த வீரர் யார்

2026 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்க உள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால், இம்முறை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது. தற்போது வரை டி20 உலகக் கோப்பையில் 1292 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்திலும், 1220 ரன்களுடன் ரோகித் சர்மா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். சூரியகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க போராட உள்ளது.
இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் விளையாடிக்கொண்டிருக்கும் ஒரே வீரர் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் மட்டுமே. 1013 ரன்களுடன் நான்காவது இடத்தில் இருக்கும் பட்லர், வரும் தொடரில் 280 ரன்கள் எடுத்தால் கோலியின் சாதனையை முறியடிப்பார். ஓய்வு பெற்ற வீரர்களான ஜெயவர்த்தனே 1016 ரன்களுடனும், டேவிட் வார்னர் 984 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதனால் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பட்லர் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.