டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை இந்தியா மீண்டும் வீழ்த்துமா
February 22, 2026

நியூஸ் டெஸ்க் : டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 சுற்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகளும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. வரலாற்றுப் புள்ளிவிவரங்களின்படி, உலகக்கோப்பை மேடையில் தென்னாப்பிரிக்காவை விட இந்தியாவே அதிக பலத்துடன் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை மோதிய 7 போட்டிகளில் இந்தியா 5 முறை வெற்றி பெற்றுள்ளது, தென்னாப்பிரிக்கா 2 முறை மட்டுமே வென்றுள்ளது. இந்த வலுவான புள்ளிவிவரம் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இன்றைய போட்டியில் இந்தியா தனது ஆதிக்கத்தைத் தொடருமா அல்லது தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.