சென்னையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பதற்றம், ஏஜென்சி அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஈரான் மீதான போர்ச் சூழலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சென்னையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் முன்பதிவு செய்தும் ஒரு வாரமாக வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நகரின் பல்வேறு இடங்களில் உள்ள காஸ் ஏஜென்சி அலுவலகங்களை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் பல பகுதிகளில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்களுக்கான சிஎன்ஜி நிலையங்களிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. வீட்டு உபயோக சிலிண்டர்கள் தொடர்ந்து வழங்கப்படுவதாக ஏஜென்சிகள் கூறினாலும், மக்கள் பீதியால் மின்சார அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் மார்ச் 25-ஆம் தேதிக்கு பிறகு புதிய கப்பல் வந்த பின்னரே நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.