செந்தில் பாலாஜிக்கு மின்னஞ்சல் வாயிலாக சிபிஐ அதிரடி சம்மன் அனுப்பியது

செந்தில் பாலாஜிக்கு மின்னஞ்சல் வாயிலாக சிபிஐ அதிரடி சம்மன் அனுப்பியது

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்று வரும் இந்த விசாரணையில், சம்மனை நேரில் வழங்க முடியாத சூழலில் அதிகாரிகள் அவரது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு இந்த உத்தரவை அனுப்பியுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசியல் தலையீடு இருந்ததா என்பது குறித்து சிபிஐ விசாரிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை திமுகவிற்கு பெரும் சவாலாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *