சுவிட்சர்லாந்தில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து மற்றும் 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் ஓடும் பேருந்தில் பயங்கர தீ விபத்து மற்றும் 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு

சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்ன் அருகே உள்ள கெர்சர்ஸ் பகுதியில் பயணிகளுடன் சென்ற பேருந்தில் திடீரென தீப்பிடித்தது. பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியதால் பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த கோர விபத்தில் சிக்கி 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *