சீன போர் விமானத்தை லாக் செய்த தைவான் எப் 16 அமெரிக்காவின் எச்சரிக்கையால பதற்றம் அதிகரிப்பு

சீன போர் விமானத்தை லாக் செய்த தைவான் எப் 16 அமெரிக்காவின் எச்சரிக்கையால பதற்றம் அதிகரிப்பு

தைவானைச் சுற்றி சீனா நடத்தி வரும் பிரம்மாண்ட ராணுவப் பயிற்சியால் ஆசியப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பிராந்திய அமைதியைச் சீர்குலைப்பதாக அமெரிக்கா கடுமையாகச் சாடியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தைவான் ஒரு அதிரடி வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் தைவானின் எப் 16 போர் விமானம், சீனாவின் ஜே 16 போர் விமானத்தை மிகத் துல்லியமாகப் பின்தொடர்ந்து ‘லாக்’ செய்வதைக் காண முடிகிறது. இது சீனாவிற்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

தைவானை சீனாவுடன் இணைப்பது தவிர்க்க முடியாதது என அதிபர் ஷி ஜின்பிங் கூறி வரும் நிலையில், தைவான் தனது தற்காப்புத் திறனை உலகிற்கு நிரூபித்துள்ளது. அமெரிக்கா தைவானிற்குப் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது சீனாவைக் கோபப்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் அமைதியைப் பேண விரும்புவதாக அமெரிக்கா கூறினாலும், எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாகத் தைவான் தனது ராணுவ வலிமை மூலம் உணர்த்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *