சீனப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு! டிராகன் ஏன் வீழ்ச்சியடைந்தது?
December 15, 2025

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. உலகளவில் சீனப் பொருட்களுக்கான தேவை குறைந்ததாலும், உள்நாட்டு முதலீடுகளில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியினாலும், நவம்பரில் சீனப் பொருளாதாரம் மிக மோசமான பலவீனத்தைப் பதிவு செய்தது. சில்லறை விற்பனை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து நிலைமை மோசமடைந்துள்ளது.
தேசிய புள்ளியியல் பணியகம் (National Bureau of Statistics) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மாதம் சில்லறை விற்பனை வெறும் 1.3% மட்டுமே உயர்ந்துள்ளது. இது கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய மிக மெதுவான வளர்ச்சியாகும். நுகர்வோர் கொள்முதல் மற்றும் பெருநிறுவன முதலீடுகளில் ஏற்பட்ட இந்த பாரிய சரிவு, பலவீனமான உள்நாட்டுத் தேவையால் டிராகன் தற்போது கடுமையான சவால்களை எதிர்கொள்வதைக் காட்டுகிறது.