சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி விளையாட கர்நாடக அரசு அதிரடி அனுமதி

சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி விளையாட கர்நாடக அரசு அதிரடி அனுமதி

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த மைதானமான சின்னசாமியில் போட்டிகளை நடத்த நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்தன. பொது பாதுகாப்பு மற்றும் ரசிகர்களின் வருகை குறித்த நிபந்தனைகளுடன் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா அறிக்கையின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதிகளை பின்பற்றி போட்டிகள் நடக்கும் என்று உறுதி அளித்தார். மாற்று மைதானமாக நவி மும்பை பரிசீலிக்கப்பட்ட நிலையில் தற்போது சொந்த மண்ணிலேயே விளையாட அனுமதி கிடைத்துள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மற்றும் விராட் கோலி தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *