சிந்து நதி நீர் ஒப்பந்தம், சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா அதிரடி, பாகிஸ்தானுக்கு தண்ணீர் சிக்கல் ஏற்படுமா?

செய்தி பிரிவு : ஜம்மு காஷ்மீரில் உள்ள நீர்மின் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கில், சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை இந்தியா அதிரடியாக நிராகரித்துள்ளது. நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள நீதிமன்றம் ஆவணங்களைக் கேட்டபோது, இந்த அமைப்பின் உத்தரவுகளை ஏற்க முடியாது என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாட்டால், சிந்து நதி நீரை நம்பியிருக்கும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாகப் பயணிக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மறுபரிசீலனை செய்தால், அது பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சர்வதேச அழுத்தங்களுக்குப் பணியாமல் தேச பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை இந்தியா இந்தச் செயலின் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.