சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே இனி பத்திரப் பதிவு செய்யலாம்
March 10, 2026

தமிழக அரசின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ் காகிதமில்லா ஆவணப் பதிவு முறை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடையே அதிகாரிகளால் விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள் இனி நேரடி வருகை இன்றி இணையதளம் வாயிலாகவே தங்கள் ஆவணங்களை எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் முறையில் விற்பனை உடன்படிக்கை, அடமானம் மற்றும் குத்தகை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை விரைவாகப் பதிய முடியும். க்யூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி மற்றும் மின்னணு கையொப்பம் இருப்பதால், ஆவணப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் நேரமும் மிச்சமாகிறது.