சார்தாம் யாத்திரை முன்னிட்டு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் உள்ளிட்ட 47 கோயில்களில் ஹிந்து அல்லாதோருக்கு தடை

சார்தாம் யாத்திரை முன்னிட்டு பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் உள்ளிட்ட 47 கோயில்களில் ஹிந்து அல்லாதோருக்கு தடை

உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் உட்பட 47 கோயில்களில் ஹிந்து அல்லாதோர் நுழைய கோயில் நிர்வாகக் குழு தடை விதித்துள்ளது. மார்ச் 10 அன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் இந்த முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சனாதன தர்மத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதே இந்த முடிவின் நோக்கம் என்று நிர்வாகத் தலைவர் ஹேமந்த் திவிவேதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஹரித்துவார் போன்ற இடங்களிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது முக்கிய புனிதத் தலங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மத அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், வரும் காலங்களில் யாத்திரை வரும் பக்தர்களுக்கான நெறிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *