சவுதி அரேபியாவின் மெகா விமான நிலைய திட்டத்தில் இந்திய நிறுவனமான ஜிஎம்ஆர் குழுமம் அதிரடி வெற்றி

சவுதி அரேபியாவின் மெகா விமான நிலைய திட்டத்தில் இந்திய நிறுவனமான ஜிஎம்ஆர் குழுமம் அதிரடி வெற்றி

சவுதி அரேபியாவில் சுமார் 7,184 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தாயிப் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கான ஏலப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜிஎம்ஆர் குழுமம் தகுதி பெற்றுள்ளது. பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் உருவாக்கப்படும் இந்த விமான நிலையம், அடுத்த 30 ஆண்டுகளுக்கு கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. இதில் அதிநவீன பயணிகள் முனையங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சாலை இணைப்புகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மெகா திட்டத்திற்கான ரேசில் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் மற்றும் துருக்கி, அயர்லாந்து நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் களத்தில் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 285 சதவீத லாபத்தை வழங்கிய ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் பங்குகள், இந்த புதிய வாய்ப்பால் பங்குச்சந்தையில் மேலும் ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த சர்வதேச அளவிலான ஒப்பந்தம் அமைகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *