சர்க்கரையில்லா டயட் பின்பற்றினால் மன அழுத்தமும் நடுக்கமும் ஏற்படுமா நிபுணரின் விளக்கம்

சர்க்கரையில்லா டயட் பின்பற்றினால் மன அழுத்தமும் நடுக்கமும் ஏற்படுமா நிபுணரின் விளக்கம்

இன்றைய காலத்தில் பலரும் ஆரோக்கியத்திற்காக ‘நோ சுகர்’ டயட்டைப் பின்பற்றுகின்றனர். ஆனால் சர்க்கரையைத் தவிர்ப்பதால் மன அழுத்தம் மற்றும் கை, கால் நடுக்கம் ஏற்படுவதாகச் சிலர் கருதுகின்றனர். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரையை நிறுத்துவதற்கும் இந்த பாதிப்புகளுக்கும் நேரடித் தொடர்பில்லை. பிடித்த உணவைத் தவிர்க்கிறோம் என்ற எண்ணம் மற்றும் உடலில் குளுக்கோஸ் அளவு குறையும் ‘ஹைப்போகிளைசீமியா’ நிலையே இத்தகைய மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கலாம்.

சர்க்கரையைத் தவிர்த்தாலும் மற்ற உணவுகள் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். தீவிரமான டயட்டைப் பின்பற்றும் போது மனதைக் கட்டுப்படுத்துவதுடன், உணவில் போதிய புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவைச் சீராக வைக்கப் பழங்களைச் சேர்த்துக்கொள்வதும், நாள் முழுவதும் அதிகளவு தண்ணீர் குடிப்பதும் உடல் மற்றும் மன எரிச்சலைக் குறைக்கப் பெரிதும் உதவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *