சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. அவையில் நிலவிய கடும் அமளிக்கு இடையே நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், இந்தத் தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் தரப்பில் 238 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே இருந்த நிலையில், ஆளும் என்.டி.ஏ கூட்டணிக்கு 293 உறுப்பினர்களின் பலம் இருந்தது. இதன் காரணமாக, ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்க்கப்பட்டபடியே எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. சபாநாயகர் மீதான நம்பிக்கையை அரசு மீண்டும் நிரூபித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *