சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் ‘இந்தியா’ கூட்டணி
February 9, 2026

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதால் கடும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லாவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளன. இதற்கான அறிவிப்பை மக்களவை பொதுச்செயலாளரிடம் வழங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளின் பலத்தை வைத்து இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பிருந்தாலும், அது வெற்றி பெறுவது கடினம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். சபாநாயகரின் நடுநிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சிகள், ராகுல் காந்தியின் உரையை தடுத்ததே இந்த அதிரடி முடிவுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளன.