சட்டமன்றத்தில் அக்னிமித்ரா பேச்சு: கொந்தளித்த ஃபிர்ஹாத் ஹக்கிம், அவையில் பெரும் அமளி!
February 6, 2026
மேற்கு வங்க சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதத்தின் போது, பாஜக எம்.எல்.ஏ அக்னிமித்ரா பால் சிறுபான்மையினர் மற்றும் மதரஸாக்கள் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் புயலை கிளப்பியுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கிம், அக்னிமித்ரா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவை போர்க்களமானது. நிலைமை மோசமானதையடுத்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவை குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்து உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார்.