சஞ்சு சாம்சன் வெளியேறிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் நியமனம்

சஞ்சு சாம்சன் வெளியேறிய நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் நியமனம்

ஐபிஎல் 2026 சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட கால கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததை அடுத்து, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் பராக் மீது நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது. 2019 முதல் அணியின் முக்கிய வீரராக இருக்கும் இவருக்கு கடந்த சீசனிலேயே வழிநடத்திய அனுபவம் உள்ளது.

கடந்த சீசனில் ஈடன் கார்டன் மைதானத்தில் 95 ரன்கள் குவித்தது உட்பட 38.57 சராசரியுடன் பராக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாம்சன் இல்லாத நிலையில் அணியின் பொறுப்பை ஏற்றுள்ள இவர், ராஜஸ்தான் அணிக்கு கோப்பையை வென்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *