கொல்கத்தா மெஸ்ஸி விவகாரம்: லியோனல் மெஸ்ஸி தான் காரணம் – சுனில் கவாஸ்கர் அதிரடி புகார்!
December 20, 2025

கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு லியோனல் மெஸ்ஸியே காரணம் என முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். அமைப்பாளர்கள் அல்லது நிர்வாகத்தை குறை கூறுவதை விடுத்து, மெஸ்ஸி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதை கவாஸ்கர் சுட்டிக்காட்டினார். சால்ட் லேக் மைதானத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மெஸ்ஸி வெளியேறியதே குழப்பத்திற்கு முக்கிய காரணம் என்றார்.
ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து வந்த ரசிகர்களை ஏமாற்றியது மெஸ்ஸி மற்றும் அவரது குழுவினரின் தவறு என்று அவர் கூறினார். பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏதுமில்லாத சூழலில், முன்னதாகவே வெளியேறியது ரசிகர்களை ஆத்திரமடையச் செய்து மைதானம் சேதமடைய வழிவகுத்தது. இந்த கருத்து தற்போது விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.