கேரளா தேர்தலில் சசி தரூருக்கு முக்கிய பொறுப்பு வழங்கி காங்கிரஸ் அதிரடி

கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரக் குழுவை அறிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், இந்த முறை இடதுசாரி அரசிடமிருந்து ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உட்கட்சி பூசல்கள் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரமேஷ் சென்னிதலா தலைமையிலான பிரச்சாரக் குழுவில் மூத்த தலைவர் சசி தரூருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. தற்போது காலில் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் தரூர், விரைவில் குணமடைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷபி பரம்பில் மற்றும் கே சுரேஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் இந்த தேர்தல் வியூகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.