குளிர்கால ஒலிம்பிக் கிராமத்தில் மூன்றே நாட்களில் தீர்ந்துபோன பத்தாயிரம் காண்டம்கள்
February 13, 2026

2026 மிலன்-கார்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய சில நாட்களிலேயே தடகள வீரர்களுக்கான காண்டம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுமார் 2,900 வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட 10,000 காண்டம்கள் வெறும் மூன்றே நாட்களில் தீர்ந்துவிட்டன. இந்த எதிர்பாராத தேவையால் ஒலிம்பிக் கிராமத்தின் ஏற்பாட்டாளர்கள் தற்போது பெரும் திணறி வருகின்றனர்.
பாதுகாப்பான உடலுறவை உறுதி செய்ய ஒலிம்பிக் கிராமத்தில் இலவசமாக காண்டம்கள் வழங்கும் நடைமுறை நீண்டகாலமாக உள்ளது. ஆனால் முந்தைய போட்டிகளுடன் ஒப்பிடுகையில் இங்கு ஆரம்ப இருப்பு குறைவாக இருந்ததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூடுதல் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் இந்த விவகாரம் உலகளவில் பேசுபொருளாகியுள்ளது.