குடிபோதையில் ராட்சத புல்டோசரை திருடி நகரின் சாலைகளில் ஒரு நபர் நடத்திய கோரத் தாண்டவம்

குடிபோதையில் ராட்சத புல்டோசரை திருடி நகரின் சாலைகளில் ஒரு நபர் நடத்திய கோரத் தாண்டவம்

இங்கிலாந்தின் வுல்வர்ஹாம்ப்டன் நகரில் 24 டன் எடையுள்ள ராட்சத புல்டோசரை திருடிய 41 வயது மதிக்கத்தக்க நபர், குடிபோதையில் நகரின் முக்கிய சாலைகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தினார். ஸ்டாஃபோர்டில் தொடங்கிய இந்த ஆபத்தான பயணத்தில், சாலை ஓரத்திலுள்ள பொருட்கள் மற்றும் பல வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் லாரியை கொண்டு தடுத்த போதும், அந்த நபர் அதை எளிதாக உடைத்துக்கொண்டு சென்றார்.

சுமார் இரவு 8:15 மணியளவில் வில்லன்ஹால் பகுதியில் வைத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் இயக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு நீண்ட கால சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *