காவல்துறையினர் என் காலை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தனர் என மரண வாக்குமூலம் அளித்த ஆகாஷ்
March 11, 2026

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் பிடியில் இருந்த ஆகாஷ் டெல்லசன் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது வாக்குமூலத்தில், சீருடை அணியாத போலீசார் தனது கண்களைக் கட்டி, தனியாக ஓரிடத்திற்கு அழைத்துச் சென்று இரும்பு கம்பியால் தாக்கியதாகக் கூறியுள்ளார். இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்த தன்னை, கீழே விழுந்ததாகச் சொல்லுமாறு மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாக்குமூலம் வெளியானதைத் தொடர்ந்து ஆகாஷின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழப்பிற்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இச்சம்பவம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.