கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் ஓடிய கணவன் மற்றும் பிறந்த குழந்தையை நிராகரித்த தாய்
December 17, 2025

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது, கணவன் தனது காதலியுடன் தலைமறைவானார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார், ஆனால் அக்குழந்தையை வளர்க்க தமக்கு வழியில்லை எனக் கூறி ஏற்க மறுத்துவிட்டார்.
கணவன் கைவிட்ட நிலையில் தமக்கு நிலையான வாழ்வாதாரம் இல்லை என அந்தத் தாய் வேதனை தெரிவித்துள்ளார். தற்போது அந்த பச்சிளம் குழந்தை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.