கரூர் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக நடிகர் விஜய் இன்று டெல்லி பயணம்

கரூர் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக நடிகர் விஜய் இன்று டெல்லி பயணம்

கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்சியின் தலைவர் விஜய் நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார். இதற்காக இன்று மாலை 3 மணியளவில் அவர் சென்னையிலிருந்து டெல்லி புறப்படுகிறார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் அவரிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் அல்லது சென்னையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற விஜய்யின் கோரிக்கைகளை சிபிஐ நிராகரித்தது. இதனால் நாளை சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், விஜய்யின் இந்த டெல்லி பயணம் அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *