கம்பீரின் பதவிக்கு ஆபத்தா? டி20 உலகக்கோப்பை தொடரே இறுதி வாய்ப்பு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் செயல்பாடுகள் முன்னாள் பயிற்சியாளர் கிரெக் சேப்பலை நினைவுபடுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அணியில் உள்ள நட்சத்திர கலாச்சாரத்தை தவிர்த்து, அனைத்து வீரர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கம்பீரின் கொள்கை, முன்பு சேப்பல் மேற்கொண்ட அதே உத்தியை ஒத்துள்ளது. மூத்த வீரர்களுடன் ஏற்பட்ட மோதலால் சேப்பல் சந்தித்த அதே சவால்களை கம்பீரும் தற்போது எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளைப் பெறவில்லை. இதன் காரணமாக, எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடர் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக கருதப்படுகிறது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறத் தவறினால், கிரெக் சேப்பலைப் போலவே கம்பீரும் தனது பதவியை இழக்க நேரிடும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.