கடலுக்கு அடியில் தங்க மலை! சீனாவின் மெகா கண்டுபிடிப்பால் உலகமே அதிர்கிறது
December 21, 2025

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள லைஜோ கடற்கரைக்கு அடியில் ஒரு பிரம்மாண்டமான தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் இப்பகுதியின் மொத்த தங்க இருப்பு 3,900 டன்களாக உயர்ந்துள்ளது, இது சீனாவின் மொத்த இருப்பில் 26 சதவீதமாகும்.
தங்கம் உற்பத்தியில் சீனா ஏற்கனவே உலகில் முதலிடத்தில் உள்ளது. தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தனது தங்க இருப்பை சீனா அதிவேகமாக உயர்த்தி வருகிறது.