ஒரே ஆடை மறுமுறை இல்லை! ‘ரிப்பீட்’ செய்யத் தயங்கும் ஜென்-ஜி; பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?

ஒரே ஆடை மறுமுறை இல்லை! ‘ரிப்பீட்’ செய்யத் தயங்கும் ஜென்-ஜி; பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?

சமூக ஊடகங்களின் ஆதிக்கம் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், ஒருமுறை உடுத்திய ஆடையை மீண்டும் அணிவதை ‘அன்-ஸ்டைலிஷ்’ எனக் கருதுகிறது இன்றைய இளைய தலைமுறை (Gen Z). குறிப்பாக, இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக்கில் ஒருமுறை புகைப்படம் பதிவேற்றிவிட்டால், அந்த ஆடை அதன் மதிப்பை இழந்துவிடுவதாக அவர்கள் நினைக்கின்றனர்.

குறைந்த விலையில் கிடைக்கும் ‘பாஸ்ட் ஃபேஷன்’ (Fast Fashion) ஆடைகளின் வரவு இந்தப்போக்கை மேலும் அதிகரித்துள்ளது. விலையுயர்ந்த ஆடையாக இருந்தாலும், அதை ஒருமுறைக்கு மேல் அணியக்கூடாது என்ற மனநிலை இளைஞர்களின் ஷாப்பிங் பழக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, மாறிவரும் ஃபேஷன் டிரெண்டுகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் ‘யூஸ் அண்ட் த்ரோ’ கலாச்சாரம் ஜென்-ஜி மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது. பலர் ஆடைகளை ஒருமுறை பயன்படுத்திய பிறகு, அவற்றை ரீ-செல்லிங் தளங்களில் விற்றுவிடுகின்றனர். டிஜிட்டல் தளங்களில் தங்களை எப்போதும் புதிய தோற்றத்தில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலே இதற்குக் முக்கிய காரணமாகும். நவீன தலைமுறையின் இந்த மனப்போக்கு ஃபேஷன் உலகின் வரையறையையே முழுமையாக மாற்றி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *