எரிவாயு தட்டுப்பாட்டால் ஒரு கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் என கெஜ்ரிவால் எச்சரிக்கை
March 11, 2026

நாடு தழுவிய எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஆத் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த எரிவாயு தட்டுப்பாட்டால் சுமார் ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாகும்.
ஏற்கனவே பெங்களூரு மற்றும் மும்பையில் உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரு தினங்களில் 50 சதவீத உணவகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றமே ஈரான் போன்ற நாடுகளுடனான உறவை பாதித்து, இத்தகைய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.