எப்ஸ்டீன் கோப்புகளில் கசிந்த இளவரசர் ஆண்ட்ரூவின் சர்ச்சை புகைப்படங்கள் உலகளவில் அதிர்ச்சி

அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள எப்ஸ்டீன் தொடர்பான 30 லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்கள் உலகப் புகழ்பெற்ற நபர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளன. குறிப்பாக, பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து நீக்கப்பட்ட இளவரசர் ஆண்ட்ரூவின் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தரையில் படுத்திருக்கும் ஒரு பெண்ணின் மீது ஆண்ட்ரூ சாய்ந்திருப்பது போன்ற காட்சிகள் அந்தப் படங்களில் உள்ளன. சிறையிலிருந்து விடுதலையான பிறகு எப்ஸ்டீனை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஆண்ட்ரூ விருந்துக்கு அழைத்ததும் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆவணங்களில் பில் கேட்ஸ், டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. எப்ஸ்டீனுடன் ஆண்ட்ரூ மற்றும் டிரம்ப் ஆகியோரை பார்த்ததாக ஒரு மசாஜ் தெரபிஸ்ட் சாட்சியமளித்துள்ளார். மேலும் பில் கேட்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில தகவல்களும் இதில் பதிவாகியுள்ளன. இருப்பினும், டிரம்ப் மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர் தங்கள் மீதான புகார்களை மறுத்துள்ளனர். இந்த புதிய ஆதாரங்கள் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.