எதிரிகளின் ரேடார்களை முடக்கும் ரஷ்யாவின் கிராசுக்கா 2 இந்தியாவிடம் ஒப்படைக்க ரஷ்யா விருப்பம்

எதிரிகளின் ரேடார்களை முடக்கும் ரஷ்யாவின் கிராசுக்கா 2 இந்தியாவிடம் ஒப்படைக்க ரஷ்யா விருப்பம்

இந்தியாவின் பாதுகாப்புப் படையை மேலும் பலப்படுத்த ‘கிராசுக்கா-2’ (Krasukha-2) எனும் அதிநவீன மின்னணு போர்முறை அமைப்பை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது ஏவுகணைகளை ஏவாமலே எதிரிகளின் ஏவாக்ஸ் (AWACS) ரக கண்காணிப்பு விமானங்களை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்டது. சுமார் 250 கி.மீ தொலைவிலேயே எதிரி நாட்டு ரேடார்களை முடக்கி, அவர்களின் தகவல் தொடர்பு சங்கிலியை உடைப்பதன் மூலம் இந்திய வான்வெளியை ஒரு கண்ணுக்குத் தெரியாத கோட்டையாக மாற்றும் ஆற்றல் இதற்கு உண்டு.

ஏற்கனவே இந்தியாவிடம் உள்ள எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புடன் கிராசுக்கா-2 இணையும் போது, அது எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக மாறும். இது எதிரிகளின் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை திசைதிருப்புவதுடன், ரேடார்களில் போலியான பிம்பங்களை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தும். நவீன கால போர்களில் ஆயுதங்களை விட மின்னணு ரீதியாக எதிரிகளை முடக்குவதே பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது, அந்த வகையில் இந்த ஒப்பந்தம் இந்திய ராணுவத்திற்கு பெரும் பலமாக அமையும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *