உங்கள் வீட்டு கழிப்பறை இருக்கையை விட அதிக பாக்டீரியாக்கள் நிறைந்த பொருட்கள் எவை தெரியுமா

செய்தி பிரிவு : வீட்டில் கழிப்பறை இருக்கையில்தான் அதிகப்படியான கிருமிகள் இருக்கும் என்று நாம் பொதுவாகக் கருதுகிறோம். ஆனால், சமீபத்திய ஆய்வுகள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், டிவி ரிமோட்டுகள், கீபோர்டுகள் மற்றும் சமையலறை ஸ்பஞ்ச்கள் ஆகியவற்றில் கழிப்பறை இருக்கையை விட அதிக அளவில் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கதவு கைப்பிடிகள் மற்றும் மின்சார சுவிட்சுகளிலும் கிருமிகள் எளிதில் பரவுகின்றன.
தலையணை உறைகள், அலுவலக மேஜைகள், டூத் பிரஷ்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உணவு கிண்ணங்களை முறையாகச் சுத்தம் செய்யாவிட்டால் அவை நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும். இந்த அன்றாடப் பொருட்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள, அவற்றை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.