ஈரான் போர் பதற்றத்தால் முடங்கிய முட்டை ஏற்றுமதி நடுவழியில் தத்தளிக்கும் கோடிக்கணக்கான முட்டைகள்

ஈரான் போர் பதற்றத்தால் முடங்கிய முட்டை ஏற்றுமதி நடுவழியில் தத்தளிக்கும் கோடிக்கணக்கான முட்டைகள்

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாமக்கல்லிலிருந்து நடைபெறும் முட்டை ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தினசரி சுமார் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது நிலவும் அசாதாரண சூழலால் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி இறுதியில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் அடங்கிய 77 கன்டெய்னர்கள் தற்போது நடுவழியில் சிக்கியுள்ளன. முட்டைகளின் காலாவதி தேதி முடிவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்றுமதியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நாமக்கல் கோழிப்பண்ணை தொழிலில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *