ஈரானில் ஆட்சி மாற்றம் மட்டுமே தீர்வு ட்ரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம்
February 14, 2026

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் ஈரானின் தற்போதைய மத தலைமை மாற்றப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றமே சிறந்த தீர்வாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர் தூதரக பேச்சுவார்த்தைகளுடன் இராணுவ தயார்நிலையையும் தீவிரப்படுத்தியுள்ளார். தேவைப்பட்டால் பலத்தை பிரயோகிக்க தயங்க மாட்டோம் என்றும் அவர் வட கரோலினாவில் வீரர்களிடையே பேசுகையில் உறுதியளித்தார்.
இதற்கிடையில் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டை அரபிக்கடலுக்கு அனுப்ப ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஆலோசித்த பிறகு ஒரு மாதத்திற்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.