இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் ஏவிய சக்திவாய்ந்த டான்சிங் ஏவுகணை

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் ஏவிய சக்திவாய்ந்த டான்சிங் ஏவுகணை

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போரின் 16-வது நாளில், ஈரான் முதன்முறையாக தனது வலிமைமிக்க ‘செஜ்ஜில்’ அல்லது ‘டான்சிங் ஏவுகணையை’ போர்க்களத்தில் இறக்கியுள்ளது. முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, இஸ்ரேலிய பகுதிகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவப்பட்டது. சுமார் 2,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இது, 700 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டது.

எதிரி நாட்டு ரேடார் அமைப்புகளை ஏமாற்றும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, 2008-ல் உருவாக்கப்பட்டாலும் தற்போதுதான் முதன்முறையாக நேரடி போரில் பயன்படுத்தப்படுகிறது. ஈரானின் உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே இந்த நவீன ஆயுதத்தை ஈரான் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. பென்டகன் தகவலின்படி, இருதரப்பிற்கும் இடையே நடந்து வரும் இந்த மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *